மதிப்புக்குரிய மோடி அவர்கள் உலகளவில் தன்னை உயர்த்தி கொண்டார். உலகரங்கு உயர்த்தியது. அல்லது இதுவும் மாயையா….

சில உலகநிகழ்வுகள்  மோடியுடன் பேச்சுவார்த்தை பிற உலகு ஊடகங்கள் கூட வெளியிடுகிறதே.முதலில் மோடி தன்னை உயர்த்தி கொண்டார். பிறகு அதை உலகநாடுகள் பயன் படுத்தி கொள்கின்றன.

இன்று உக்ரைன் போர்நிறுத்த முடியுமா என்று இங்கிலாந்து (பெண்) மந்திரி இங்குவந்து ஆலோசனை செய்கிறார் (30.03.2022). இது நம் நாட்டின் தலைமைக்கு பெருமைதானே.20,000 மருத்துவ மாணவர்களை போர்முனையில் இருந்து மீட்டுவருவது சாதாரணமான வேலையா? அதை செய்திருக்கிறார்கள்.

அஃது எப்படி? உக்ரைனிடமும் ஒத்துழைப்பு , போர்தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்தும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதுசாத்தியம். என்றோ இவர் ஊர் சுற்றியதன் பலன் இந்த போர்க் காலத்தில் பயன் படுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு கொரோனா மருந்து நம்நாட்டில் இருந்து இலவசமாகக் கொடுத்தது இன்று நம்மேல் மரியாதை தருகிறது. ஆகவே மோடி சொல்வதை பிறநாடுகள் கேட்கின்றன.

எல்லா நாடுகளுக்கும் நண்பனாக ஒரு நாடுஇருப்பது, பல நேரங்களில் முள் மேல் நடப்பது போன்று இருக்கும்.

கொரோனா காலத்தில் உலகம்முழுவதும் அவ்வளவு குறைந்த விலையில் பெட்ரோல் கிடைத்தது. அப்போதுகூட நம் நாட்டில் இவர் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று இவர்மேல் எனக்கு வருத்தம் உண்டு. அஃது இன்னும் குறையவில்லை என்றாலும் மோடி மிக சிறந்த தலைவர் என்பதில் மாரு கருது இல்லை.

ஒரு வாசகரின் கடிதம் 

Comments are closed.