உலக பொருளாதாரத்தில் இந்தியாஜொலிக்கும் நட்சத்திரமாக மின்னுகிறது என தென்ஆப்ரிக்க வர்த்தகர்கள் கூட்டத்தில் பிரதமர்மோடி பெருமிதத்துடன் பேசினார். தென் ஆப்ரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜேக்கப்சுமா பாரம்பரிய முறைப்படி சிறப்பானவரவேற்பு அளித்தார்.

பின்னர் பிரிட்டோரியாவில் நடந்த இந்திய தென் ஆப்ரிக்க வர்த்தகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தாராளமயக்கப் பட்டுள்ளதால் வர்த்தக உறவுகளை அதிகரி்க்க கதவுகள் திறக்கப் பட்டுள்ளன. தென் ஆப்ரிக்கா இந்தியாவின் முக்கியவர்த்தக நண்பனாக உள்ளது. இருநாட்டுவர்த்தக உறவு 380 சதவீதம் உயர்ந்துள்ளது. வரலாற்று ரீ்தியாகவும் இந்தியா தென்ஆப்ரிக்கா இடையே வலுவான உறவு நிலவுகிறது.

தென் ஆப்ரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பாகவர்த்தகம் மேற்கொள்கின்றன. மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளா தாரத்தில் முக்கிய பங்காற்றும். உலக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கும் நட்சத்திரத்தைபோல் மின்னுகிறது. உலகபொருளாதார வளர்ச்சியின் இயங்கு சக்தியாகவும் செயல்படுகிறது.

Leave a Reply