மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு கிடைத்தவெற்றியானது, குஜராத்திலும் தொடர்கிறது. ரூபாய் நோட்டுவாபசிற்கு பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.,வுக்கு தெம்பை ஏற்படுத்தி யுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ்தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும்விமர்சனம் செய்துவரும் நிலையில், பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பணம் மாற்றுவதில் சிரமம் ஏற்படுத் தினாலும் மக்கள் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தருவதையே இதுகாட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


குஜராத்தில் 126 நகராட்சிகள் மற்றும் 16 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்நடந்தது. இதில் பா.ஜ., 109 நகராட்சிகளை கைப்பற்றியது. இதில் 40 நகராட்சிகளை காங்கிர சிடமிருந்து பா.ஜ., கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 17 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. குஜராத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தவெற்றி பா.ஜ.,வுக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் கிடைத்த வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பா.ஜ., மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு கிடைத்தவெற்றி, பா.ஜ.,வின் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சிதேர்தல் 4 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டமாக, 147 நகராட்சிகளில் மற்றும் 17 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்நடந்தது. இதில் மொத்தமுள்ள, 3705 சீட்களில், பா.ஜ., 851 சீட்களை கைப்பற்றியது. 147 நகராட்சிகளில், 52 நகராட்சிகளை பா.ஜ., கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் ஆதிக்கம்செலுத்திய பல இடங்கள் பா.ஜ., வசம் வந்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக இருந்த பிரித்வி ராஜ் சவுகான் மற்றும் நாராயன் ரானே மாவட்டங்களில் காங்கிரஸ் தோல்விய டைந்துள்ளது.


இந்தவெற்றி தொடர்பாக பா.ஜ.க, தலைவர் அமித் ஷா கூறுகையில், ரூபாய்நோட்டு வாபஸ் குறித்து மக்களிடம் தவறான தகவலை பரப்பிய எதிர்க் கட்சிகளுக்கு பாடம். ரூபாய் நோட்டு வாபஸ் நாட்டுநலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்றார். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய முதல்வர் பட்நாவீசுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்தமுடிவுக்காக மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், பா.ஜ.,வின் ஏழைகளுக்கு ஆதரவு மற்றும் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த ஆதரவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply