பாலியல் புகாரில் சிக்கிய உ.பி. அமைச்சர் காயத்ரிபிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்டவர் அமேதிதொகுதியில் தோல்வியடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவர் தலைமறைவாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாடி கட்சி தலைவர்களில்  ஒருவரும், அகிலேஷ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவருமான காயத்ரி பிரஜாபதி என்பவர் மீது கடந்த அக்டோபர் மாதம் ஒருபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரை 16 வயது மகளை கெடுக்க முயற்சித்ததாகவும் புகார்செய்யப்பட்டது. இந்தபுகார் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றம் சென்றார். அதன்பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் 6  பேர் கைது செய்யப் பட்டனர். இந்த நிலையில் உ.பி. தேர்தலில் பிரஜாபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பின்னர் நீதிமன்றம் பிடிவாரண்ட்  பிறப்பித்ததைதொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அவரை டிஸ்மிஸ் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை அகிலேஷ் நிராகரித்து விட்டார்.


இந்த நிலையில் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 325 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சமாஜ்வாடி 47 தொகுதியில் மட்டும் வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. புதிய முதல்வர் பதவியேற்கும் வரை காபந்து அரசின் முதல்வராக அகிலேஷ் யாதவ் நீடிக்கிறார்.


தேர்தல் வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த பிஜேபி தலைவர் அமித்ஷா, பிரஜாபதியை விரைவில் கைதுசெய்வோம் என்று கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று லக்னோவில் கைதுசெய்யப்பட்டார்.  தலைமறைவாக இருந்த அவர் லக்னோ திரும்பியபோது உ.பியின் கிழக்கு பகுதியில் உள்ள  அவரது வீட்டை போலீசார் சுற்றிவளைத்து கைது
செய்தனர்.

Leave a Reply