உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தியில் திங்கள் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைத்ததும், கால்நடை வதைக் கூடங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்யும். காதல் என்ற பெயரில் அத்துமீறும்நபர்களுக்கு (ரோமியோக்களுக்கு ) எதிரான படையை பாஜக அரசு ஏற்படுத்தும். நிலஅபகரிப்பாளர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒருவர் தனது எருதுகாணவில்லை என்று புகார் தெரிவிக்கிறார் (சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்தார்). இது குறித்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கும்படி அவரை கேட்டுக்கொள்கிறேன். அதன்பிறகு ஆஸம் கானுக்குச் சொந்தமான காணாமல்போன அனைத்து எருமைகளும் கண்டுபிடிக்கப்படும். அவரது எருது, கால்நடை வதைக்கூடத்துக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கலாம் என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் சிலருக்குமட்டுமே சமாஜவாதி அரசு மடிக்கணினியை அளித்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் மடிக்கணினி அளிக்கும். இதில் ஜாதி, மத வேறுபாடுகளை பாஜக பார்க்காது என்றார் அமித்ஷா.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும்வாக்குகள் மார்ச் மாதம் 11-ம் தேதி எண்ணப் படுகின்றன. இந்த எண்ணிக்கை நடைபெறும் தேதியை சுட்டிக் காட்டியே, அப்போது நல்ல காலம் பிறக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திரமோடி தனது பிரசாரத்தில், பாஜக ஆட்சிக்குவந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply