பாகிஸ்தானில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அபிநந்தன் பிறந்த மண்ணில் பேசுவதில் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எனது வணக்கங்கள். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் 30-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தகவல் கிடைத்திருக்கிறது.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 13-வது நிதிக் குழுவில் தமிழகத்துக்கு 94,540 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தனர். ஆனால், பி.ஜே.பி அ.தி.மு.க-வுடன் கூட்டணியில்.

இல்லாதபோதும்கூட தமிழகத்துக்கு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி, நம் நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ராணுவ தடவாள பூங்கா. மீனவர்களின் நலனுக்காக, தனித் துறை. சாகர்மாலா திட்டத்துக்காக, 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் ஏற்றுமதி அதிகரிக்க திட்டம், திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியது எனப் பல்வேறு நலத்திட்டங்களை பி.ஜே.பி தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.

`மத்திய பா.ஜ.க அரசு 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு, 8 கோடி வீடுகளுக்குக் கழிவறை வசதி, இரண்டரை கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 கோடியே 35 லட்சம் வீடுகளுக்கு மின்சாரவசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. பிரதம அமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் 50 கோடி மக்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பாகிஸ்தான்காரர்கள் நமது ராணுவ வீரர்களின் தலையை வெட்டிச் சென்றபோது பதிலடி கொடுக்காமல் இருந்தார்கள். ஆனால், பி.ஜே.பி ஆட்சியில் புல்வாமா தாக்குதல் நடந்த 12 நாள்களில் மோடி பதிலடி கொடுத்தார். பப்பு ராகுல் காந்தியும், ஸ்டாலினும் பாகிஸ்தான் மீது தாக்குதல் வேண்டாம், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனச் சொல்கிறார்கள். மக்களே… உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். சொல்லுங்கள், நம்முடைய 40 ராணுவ வீரர்களைக் கொன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா அல்லது பதிலடி தர வேண்டுமா?”.

நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் நாட்டுக்குப் பாதுகாப்புத் தர முடியாது, இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வேண்டும், காஷ்மீருக்கு ஒரு பிரதமர் வேண்டும் என உமர் அப்துல்லா சொல்கிறார், இதை ராகுல் ஏற்கிறாரா?. பா.ஜ.க இருக்கும் வரை காஷ்மீரை இந்தியாவிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம், இந்திய அளவில் நம் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். இதோடு முடிந்து போகும் கூட்டணி அல்ல இது. சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடரும்.

ஒருபுறம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி. மறுபுறம் 12 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்திருக்கும் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகள் நிறைந்த கூட்டணி. சமீபத்தில் ராகுல்காந்தி அனைவருக்கும் தக்க திட்டங்கள் கொடுக்க வேண்டும். யாரும் சிறைச்சாலைக்குச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஒருவேளை கார்த்தியை மனதில் வைத்துத்தான் சொல்லி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

தமிழகத்தில் நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தூத்துக்குடி சிவகங்கை கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் அதன் தொகுப்பு.

Leave a Reply