தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். ஆனால் ஊழல்குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை பெற்றவர்கள் சுட்டிக்காட்டிய ஆட்சி அமைவதை மக்கள் விரும்ப வில்லை.

சட்டமன்றத்தில் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றிபெற்றாலும், ஊழலற்ற, குடும்ப தலையீடு இல்லாத ஆட்சி அமையுமா? என்பது கேள்விக் குறிதான்.

இப்போது கட்டாயத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைக்கப்படுகிறது. மக்கள்விருப்பத்தின் அடிப்படையிலான ஆட்சி அமையவில்லை. இதற்கு ஒரேவழி மீண்டும் தேர்தலை சந்திப்பதாகத்தான் இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply