ஊழல் நோய் பீடிக்காத வகையில் நோய் எதிர்ப்புசக்தியை வளர்த்து கொள்ளுங்கள் என இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை கூறினார்.


2013-ம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த இளம் ஐஏஎஸ். அதிகாரிகள் 169 பேர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். இவர்கள் அவரவர் மாநிலங்களில் பணி அமர்த்தப் படாமல், டெல்லியிலேயே உதவி செயலாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் நீங்கள். அடுத்த 10 ஆண்டுகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை. நாட்டின் ஐந்தில் ஒருபங்கு மாவட்டங்களில் நீங்கள் பணியாற்றிவிட முடியும்.

இந்தியா, புதிய உயரத்தை எட்டக் கூடிய பொன்னான வாய்ப்பு உள்ளது. நீங்கள் மாற்றத்தின் தூது வர்களாக இருந்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பதற்றமும், போராட்டமும் இருந்தால், மாற்றத்தை கொண்டு வர முடியாது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை இணைக் கிறீர்களோ, அதில்தான் மாற்றம் இருக்கிறது. நாட்டுக்கு பலனளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.


சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்துவிடுவதை பார்த்திருக்கிறோம். வேறுசிலரோ, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறோம். அதற்கு நோய் எதிர்ப்புசக்திதான் காரணம். பரம்பரை ரீதியாக வரும் வலிமை, வைரஸ் காய்ச்சலை எதிர்த்துநிற்கிறது.

அது போல், நீங்கள் எங்கே சென்றாலும், சோம்பல்நோய் இருக்கலாம், சோர்வுநோய் இருக்கலாம், ஊழல் நோய் இருக்கலாம். இவற்றால் பீடிக்கப்படாத வகையில், நோய் எதிர்ப்புசக்தியை வளர்த்து கொள்ளுங்கள். வலிமையுடன் இருந்தால், நோய் தாக்கினால்கூட ஒரே ஒருமாத்திரையால் நோய் குணமாகிவிடும். ஒரு மாத்திரையே அவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், மனிதர்களால் முடியாதா?

உங்களுக்கு ‘ஈகோ’ இருக்கக் கூடாது. குழுவாக பணியாற்றுங்கள். உங்கள் துறையில் அனுபவம் மிக்கவர்களிடமோ அல்லது ஓய்வு பெற்றவர் களிடமோ யோசனைகளை பெற்று செயல் படுங்கள்.

நாம் எங்கே இருந்தாலும், நமதுபொறுப்புகள் என்னவாக இருந்தாலும், நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று முடிவுசெய்து செயல்பட்டால், இந்நாடு முன்னேறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Leave a Reply