ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்று, காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில்  கொண்டாடி வருகின்றனர். பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா விமர்சித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைதுசெய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில், சிபிஐ வழக்கில் ஜாமீன்பெற்ற ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் 105 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அமலாக்கத்துறை தொடர்ந்தவழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நவம்பர் 15ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனை, காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை பாஜக இன்று விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா டுவிட்டரில்,

”ஊழலை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்கள் பட்டியலில் ப.சிதம்பரமும் இறுதியாக இணைந்து விட்டார். பேராசைப்படும் அந்தகுழுவில் அவர் இணைந்து விட்டார். அந்த குழுவில் உள்ள சிலநபர்கள் 1.சோனியா காந்தி, 2.ராகுல் காந்தி, 3. ராபர்ட் வாத்ரா, 4.மோதிலால் வோரா, 5. புபீந்தர் ஹூடா, 6. சசி தரூர் என பலரும் உள்ளனர்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Comments are closed.