ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 2ஜி, காமன் வெல்த் விளையாட்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டுஊழல், விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என்று ஒவ்வொரு நாளும் ஒருஊழல் நடந்தது. இதுபோன்ற மிகப்பெரிய ஊழல்கள் மூலம் 3 மடங்கு மத்திய பட்ஜெட்டுக்கு இணையான ரூ.12 லட்சம் கோடியை காங்கிரஸ் தலைவர்கள் குவித்தனர்.

இந்தபணத்தை காங்கிரசார் தங்களுடைய வீடுகள், குடோன்கள், நண்பர்களின் வீடுகளில் மிகவும்பத்திரமாக பதுக்கிவைத்து இருந்தனர்.

அவர்கள் குவித்த அந்த பணம் எல்லாம் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் குப்பைபோல் ஆகிவிட்டது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அதிருப்தியடைந்து இருக்கின்றனர். அவர்களின் முகங்கள் வாடிப்போய் விட்டன.

வெள்ளத்தில் அனைத்துமே அடித்துச்செல்வது போன்ற ஒருநிலைமை இது. தற்போது காங்கிரஸ் தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தாபானர்ஜி, முலாயம்சிங் போன்றோர் இந்த வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கைகோர்த்து உள்ளனர். எங்களிடம் கருப்புபணம் கிடையாது. அதை வைத்திருப்பவர்கள்தான் கவலைப்படவேண்டும். ரூ.4 ஆயிரத்தை வங்கியில்மாற்ற, ரூ.4 கோடி மதிப்புடைய காரில்வரும் ராகுல், சாமானிய மக்களின் நலன்குறித்து பேசுகிறார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் பரூச் நகரில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் நேற்று பேசியது

Leave a Reply