ஜி20 மாநாட்டில்பேசிய பிரதமர் மோடி தெற்காசியாவில் உள்ள ஒரேயொருநாடு தீவிரவாதத்தை பரப்புவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,தெற்காசியாவில் உள்ள ஒரேயொருநாடு எங்கள் பகுதியில் தீவிரவாதிகளை பரப்புகிறது. இதுகுறித்து சர்வதேச சமூகம் கலந்தாலோசித்து ஒன்றுபட்டு செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து ஆதரவளிப்போரை கண்டு பிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.

சர்வதசே அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம்விளைவிக்கும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறோம். வளர்ந்துவரும் தீவிரவாதம் சவாலாக உள்ளது. இந்தியா தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எங்களை பொறுத்த வரையில் தீவிரவாதி என்றால் தீவிரவாதி தான் என்றார்.

 

Leave a Reply