ஆளுனரின் அதிகாரம்பற்றி மீண்டும் விவாதம். ஆளுனர் அரசு அதிகாரிகளைச் சந்திப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது திமுக மற்றும் எதிர்கட்சிகளின் வாதம். அரசியல் அமைப்பு கொடுக்காத அதிகாரத்தை ஆளுனர் எடுத்து கொள்வதாக புகார் கூறுகின்றன. என்னுடைய விளக்கம் இதுதான்….

ஆளுனர் நிச்சயமாக அமைச்சரவையின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டிய நிலையில் உள்ளவர் தான். ஆளுனர் ஒரு executive நபர் கிடையாது என்பதும் உண்மைதான். ஆளுனர் ஒரு observer மட்டுமே என்பதும் உண்மை தான். ஆனால் Observer என்றால் அவர் observe மட்டும் பண்ணிவிட்டு சும்மா இருப்பது அவரின் வேலை யில்லை. அப்படி இருப்பதுதான் அவர் வேலை என்றால் அவர் observe பண்ணவேண்டிய அவசியமே யில்லையே? Observe செய்த விஷயங்களை periodical report ஆக மையஅரசிற்கு அனுப்பவேண்டியது அவரின் கடமை. அதை எல்லா கவர்னர்களும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை ஒருகவர்னர் எவ்வாறு செய்கிறார்? மாநில அரசின் உயர் அதிகாரிகளிடம் இருந்து(தலைமை செயலாளர் உட்பட) report பெற்று அதை ஆய்ந்துசெய்து அதை அடிப்படையாக கொண்டு ஆளுனர் report தயாரித்து அதை மைய அரசிற்கு அனுப்புகிறார்.

அவசியம் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளை (தலைமை செயலாளர் உட்பட) அழைத்து கவர்னர் விளக்கம்கேட்பது உண்டு. பல கவர்னர்களும் இதுபோல் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசியது பல முறை நடந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருகிறேன். மொத்தத்தில் observation என்பது ஆளுனரின் கடமை. இந்த observation ஐ அவர் நேரடியாக களத்தில்சென்று செய்வதற்கு அரசியல் அமைப்பில் எந்தத் தடையும் இல்லை. களத்திற்குச் சென்று தன் observation ஐ மேற்கொள்வது என்பது நமக்குப் புதியது தான். ஆனால் தவறேதும் கிடையாது. Observation ஐ சிறப்பாகச் செய்கிறார் என்பதே உண்மை. மாநில அரசுகொடுக்கும் செய்திகளின் அடிப்படையில்தான் கவர்னர் periodical report அனுப்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. நேரடியாகச் சென்று கள நிலவரத்தை அறிய அவருக்கு முழு உறிமை உண்டு. மேம்பட்ட சரியான, சரிபார்க்கப்பட்ட periodical report ஐ தயாரிக்கவே இந்த ஆய்வை அவர் பயன்படுத்துகிறார். அவரின் கடமையை சரியாக, மேம்பட்ட வகையில் தமிழக ஆளுனர்செய்கிறார் என்பதே உண்மை. ஆளுனர் அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் இடவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். பிறகு எங்கே அத்துமீறல் வந்தது?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.