எச்ஏஎல் இருக்க ரிலையன்ஸ் எதற்கு என்று பிஎஸ்என்எல்லைப் பயன்படுத்தாது ஏர்டெல், வோடபோன், ஜியோ, ஐடியா போன்ற நிறுவனங்களின் மொபைல் இணைய வசதியைப் பயன்படுத்தி, அந்நிய நாட்டு அலைபேசி சாதனத்தின் துணையுடன் அயல்நாட்டு பேஸ்புக்கில் பதிவு, கமெண்ட் என்று முகூ போல் உளறிய மேதாவிகளுக்கு:

கான்கிரஸ் ஆட்சியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 2017 ஆம் ஆண்டு 272 சுக்கோய் ரக விமானங்களில் 222 விமானங்களைத் தயாரித்து ராணுவத்தில் சேர்ப்போம் என்று நிறுவனம் உறுதிமொழியினை அரசுக்குத் தருகிறது. அதற்கு முன்பு அதே சுக்கோய் ரகத்தில் 50 விமானங்கள் ரஷ்யா நாட்டிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு கான் கிரஸ் ஆட்சி போய் மோடி தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்ற பின் வருடா வருடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம், போனஸ் என்று ஒப்பாரி வைத்து அந்நிறுவனம் வாங்கிக் கொள்கிறது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து விமானங்கள் தயாரிப்பதற்கான அனைத்து உதிரிப் பாகங்களையும் இறக்குமதி செய்தும் பெற்றுக் கொள்கிறது ஆனால் அசெம்ப்ளிங் என்று சொல்லப்படும் கட்டுமான நடவடிக்கைகளைக் கூட அந்நிறுவனத்திற்கு சரியாக செய்ய வக்கில்லை.

தற்போது ஒப்பந்தப்படி 2017 ஆம் ஆண்டு 222 விமானங்களை எங்களால் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க முடியவில்லை. மேலும் கால அவகாசமும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் வேண்டும் என்று அந்த நிறுவனம் சொல்கிறது. கால அவகாசம் அதிகமில்லை. தோழர்கள் கேட்பது மேலும் இரு வருடங்கள். அதாவது 2020 ஆம் வருடம். அந்த அவகாசமும் இறுதியானது இல்லையாம்.

வருடாந்திர நிதி ஒதுக்கீடு, ஊழியர்கள் சம்பளம், பிற சலுகைகள் என அனைத்தையும் சேர்த்தால் நம் அரசாங்கத்திற்கு ரஷ்யாவிடமிருந்து நாம் நேரடியாக வாங்கிய 50 சுக்கோய் ரக விமானங்களை விட விலையில் சுமார் நாற்பது விழுக்காடு கூடுதல் செலவு.

இந்த யோக்கியதையை பல முறை அது வெளிப்படுத்தியதால் இந்திய அரசானது தற்போதைய ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரெஞ்ச் நிறுவனங்கள் விமானங்களுக்கு கால உத்திரவாதம் வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த போது, எச்ஏஎல்லுடன் இணைந்து பணியாற்றினால் தங்களால் உத்திரவாதத்தை வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்தது. அரசாங்கம் பரிந்துரைத்த எச்ஏஎல்லுடன் கூட்டு என்பதையும் நிராகரித்தது. இருப்பினும் அரசு எச்ஏஎல்லின் மற்றொரு துணை நிறுவனத்தை ரஃபேல் தயாரிப்பு ஒப்பந்தத்தில் இணைத்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published.