சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்கமாட்டோம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்

வரும் ஏப்ரல் மாதம் 18-ம்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக அதிமுக அமைச்சர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில், பாஜக தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார்.

அப்போது பேசியவர், சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்கமாட்டோம் என்று சபதம் ஏற்றிருப்பதாகக் கூறினார்.

Leave a Reply