முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொடர்ந்து அவரது பதவியில் நீடிக்க இறைவன்தான் அருள் புரியவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தின் தற்போதைய சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்கு யோசித்து முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அரசியல்நெருக்கடி குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், நாளைதான் அதற்கு பதில் தெரியும் என்றார். எம்ஜிஆர் ஆரம்பித்து ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக கட்சி முடிந்துவிட்டதாகவும், தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் 100 சதவீதம் தமிழகம் இருக்காது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply