ஜிஎஸ்டி சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்தியஅரசு குறித்து எதிர்க் கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.


மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்.பி.க்களுடன் நரேந்திரமோடி வியாழக்கிழமை காலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:


நாட்டில் இதரப் பிற்படுத்தப் பட்டோர், ஏழைகள், பெண்கள் ஆகியோரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.எனினும், இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக மத்தியஅரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த எதிர்க் கட்சிகள் முயன்று வருகின்றன. குறிப்பாக, இதரப் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தை மத்தியஅரசு கலைக்க முயற்சிப்பதாக மக்களிடம் எதிர்க் கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.


அதேபோல், ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த பொய்ப்பிரசாரங்களை பாஜகவினர் முறியடிக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும் என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply