ஸ்டாலின் அவர்களே – ஏதோ, அண்ணா உருவாக்குன மடத்த உங்க அப்பா ஆட்டையப் போட்டு 50 வருஷம் தலைவரா இருந்தாரு –

அவர் கோமால இருக்கும் போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரல -ஆள் போனதுக்கு அப்பறம் நோகாமவந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க ?-

1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.கவுல _

ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு -70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க –

எது ஜனநாயகக் கட்சி? –

சரி இருக்கட்டும் –

தி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் கழிச்சு உருவான கட்சி பாஜக-

இன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்ட தொண்டன் பிரதமரா இருக்காரு, -அடி மட்டத்தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு –
துணை ஜனாதிபதியா இருக்காரு –

அந்தக் கட்சி இந்தியாவ மட்டுமல்ல – 12 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு -4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடத்துது –

அது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு -கிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி – (272 + 73)

1500 MLA க்கள் உள்ள கட்சி –

அப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக் சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா? –

சரி கட்சிய விட்டுடுவோம் –

14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா? -உங்க மகனோட ஹம்மர் காரோட விலைல கால்வாசி கூடக் கிடையாது-

அவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும் –

ஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு?-

முரசொலி மாறன் –
தயாநிதி –
அழகிரி –
கனிமொழி – ன்னு எல்லாருக்கும் பதவிகள பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது –

அது மட்டுமா?-
உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
கயல்விழி – ன்னு
அடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது –

அஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்து சாப்படற அளவுக்கு சொத்து சேத்தாச்சு –

டிவி சேனல் மட்டும் 45 இருக்கு –

போதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகணும்ங்கற அளவுக்கு கொண்டு வந்தாச்சு –

அசையா சொத்துக்கள் கணக்கேயில்ல -அசையும் சொத்துக்கள்னா –
லம்போகினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்க கிட்ட இல்லாத காரே இல்ல –

இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க -மோடிய எதுக்கப் போறீங்களா?

அவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது –

மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா?-

இன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டா கூட –
காசுகுடுத்து கூட்டத்த கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு –

ஆனா, மோடிக்காக உயிரைக் கூட குடுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க –

அது தான் அவரோட சொத்து -2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர் –

இந்தியா மட்டும் அல்ல -கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கும் காவி பெயிண்ட் அடிச்சே தீருவோம் –

ஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம் –

நீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க –

தேசப்பணியில் என்றும் –
தேசத்தொண்டன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.