எத்தனால் கலந்தபெட்ரோலை விற்பனைசெய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டன. இதில் குறிப்பாக எத்தனால்கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன் பாடு பல மடங்கு உயர்ந்து இருப்பதால் அதிகஅளவில் இறக்குமதி செய்யவேண்டி உள்ளது. இதனால் செலவு அதிகரித்தது. இதைகட்டுப்படுத்த எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பனைக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவுசெய்தது.

 

Leave a Reply