மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மாலை அல்லது நாளை (28–ந் தேதி) தமிழகம் வருகிறார். சட்ட மன்ற தேர்தல்கூட்டணி குறித்து ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். பா.ஜ.க.,வுக்கு வலுவான கூட்டணி அமையும்.

எந்த ஒரு அரசியல்கட்சியும், தங்களது கட்சி தலைவரை முதல்–அமைச்சராக அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சிகளின் கொள்கைகளை ஏற்று நடப்பது தான் தர்மம்.

எந்தகட்சியும் தங்கள் கூட்டணியை இது வரை இறுதி செய்ய வில்லை. தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிகூட எந்த நிலையில் இருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியும்.

Leave a Reply