அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா நெருங்குகிறது அதேநேரத்தில், இது தெற்காசியாவின் அணுசக்தி சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்

என்எஸ்ஜி கூட்டமைப்பில் எப்படியாவது உறுப்பினராகிவிட வேண்டும் என்பதில் இந்தியா விடாப்பிடியாக இருக்கிறது. இதற்குகாரணம் இல்லாமல் இல்லை. பாகிஸ்தானைவிட அதிக அணு வல்லமை கொண்ட நாடு என்று தன்னை பறைசாற்றிக்கொள்ள இந்தியா விரும்புகிறது.

ஒருவேளை, பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு என்எஸ்ஜியில் இந்தியா முதலில் உறுப்பினரானால் இரு நாடுகளுக்கும் இடையேயான அணுஆற்றல் தொடர்பான சமநிலை தவறிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவது ஒட்டுமொத்த ஆசிய – பசிபிக் பிராந்தியத்துக்கே ஆபத்தாகக் கூடும். ஏனெனில், அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தம், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் உள்ளிட்ட எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா இதுவரை கையெழுத்திட வில்லை.

அப்படி இருக்கும்போது, என்எஸ்ஜியில் இந்தியாவை உறுப்பினராக சேர்த்துக்கொண்டால் "சட்டப்பூர்வ அணு ஆயுத நாடு' என்ற அங்கீகாரம் அந்நாட்டுக்கு கிடைக்கும். இது, தெற்காசியாவின் சமநிலை யையே சீர்குலைத்துவிடும்.

இந்தக் காரணங்களால் தான், எஸ்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா, நியூஸிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன.

இத்தனை எதிர்ப்புகள் இருந்தபோதிலும், என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கான வாய்ப்பை இந்தியா நெருங்கியி ருக்கிறது என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் ஆதரவை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி திரட்டியதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

என்எஸ்ஜி கூட்டமைப்பில் இந்தியா இணைவதில் சீனாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதேசமயத்தில், அணுசக்திதொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உரியவிதிகளைப் பின்பற்றுமேயானால், இந்தியாவுக்கு சீனாவும் ஆதரவளிக்கும். ஆனால், இந்த விதிமுறை களைத் தகர்த்துவிட்டு என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகும் பட்சத்தில், அணு ஆயுத தொழில் நுட்பங்கள் அந்நாட்டுக்கு மிகவும் எளிதாக கிடைக்கும். அவற்றை தனது ராணுவ தேவைக்காக இந்தியா பயன்படுத்த வாய்ப்புள்ளது .

சீன அரசின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் வியாழக்கிழமை வெளியான கட்டுரையில் புலம்பிய சீனா.

Leave a Reply