சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ வழியிட்ட வாள்காண வாரீர்-இராச ராசா சோழனுலா காவிரி யாருக்கு உரிமை என்று சண்டைகள் இன்று நேற்று தொடங்க வில்லை.இது 11 ம் நூற்றாண்டில் அன்றைய சோழமன்னன் இரண்டாம் ராஜாராஜ சோழன் காலத்திலேயே தொடங்கிவிட்டது.மன்னராட்சியில் வாள் முனையில் நிர்ணயிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைமக் களாட்சியில் விரல் முனையில் விழும் மையினால் தடுக்கப்பட்டு வருகிறது.எந்த கட்சி தமிழ் நாட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அவர்களுக்கே கர்நாடகா வில் ஓட்டு அதிகம் கிடைக்கும்.என்பதால் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களின் உடைமைகளை எரிக்கிறார்கள்.

காசு கொடுத்து ஓட்டு வாங்கி இலவசங்களை அள்ளிக் கொடுத்து விட்டு ஆட்சிக்குவரும் கழக அரசுகள் நீர் மேலா ண்மையில் தொலைநோக்கு திட்டங்களை செயல் படுத்தாமல் காவிரிக்காக கோடிக் கணக்கில் வக்கீல்களுக் கே பீஸ் வழங்கி விட்டு எல்லாம்கோர்ட் பார்த்துக் கொள்ளும் என்று கூறியே அரை நூற்றாண்டை ஓட்டிவிட்டார் கள்.வருங்காலங்களில் கழகங்களின் ஆட்சி இப்படியே தொடர்ந்தால் இலவசங்கள் இருக்கும் ஆனால் வாங்க
யாரும் இருக்க மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300TMC தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் ஆண்டுக்கு 3700 TMCதண்ணீர் உற்பத்தியாகிறது. இதனா ல் தமிழகம் கர்நாடகாவின் தயவினை எதிர்பார்ப்பது இயல் பே..இது இலவசம் அல்ல தமிழகத்தின் உரிமை.எப்படி கிருஸ்ணா நதி நீரில் கர்நாடகம் உரிமை கோருகிறதோ அதே உரிமையை காவிரியிலும் தமிழகம் கேட்கிறது.

காவிரி கர்நாடக மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக தூரம் சமவெளியில் சென்று கடலில் கலக்கி றது 800 கிலோமீட்டர் நீளம் கொண்ட காவிரிஆறு 416 கிலோமீட்டர் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர் பரப்பிலும் 64 கிலோமீட்டர் தொலை வினை இரண்டு மாநில எல்லைகளின் வழியாகவும் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

தமிழக நிலப்பரப்பில் 34 சதவீத நிலங்கள் காவிரியின் வழித்தடத்திலேயே இருக்கின்றது. ஆனால் கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பு தான் காவிரிகரையில் இருக்கிறது,ஏனென்றால் தமிழ்நாட்டில் காவிரி உயிர் என்றால்
கர்நாடாகாவில் காவிரி ஆறு கன்னடர்களுக்கு உதவி அதாவது ஸ்டெப்னி மாதிரி.ஏனென்றால் கர்நாடாகாவில்
காவிரியை விட பெரிய நதியான கிருஸ்ணாநதியும் காவிரிக்கு இணையான துங்கபத்ராவும் பாய்ந்தோடி கர்நாடகா
வை வளமாக்குகிறது.இது மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து செல்லும் கபினி நதியும் கர்நாகாவி ற்கு 140 TMC தண்ணீரை அனாமத்தாக அளிக்கிறது

சொல்லப்போனால் காவிரியைகாட்டிலும் கிருஸ்ணா நதியின் மூலமே கர்நாடாகாவில் நீர் அதிகமாக கிடை க்கி றது.மகராஸ்டிராவில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதி அங்கு வெறும் 303 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பாய்கின் றது.ஆனால் கர்நாடாகாவில் 480 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கர்நாடாகாவை வளமாக்குகிறது. கிருஸ் ணா நதி வரும் வழியில் இருக்கும் கர்நாடகவி ற்கு 734 TMC தண் ணீர் கிடைக்கிறது,ஆனால் கிருஸ்ணா நதியி ன்பிறப்பிட மான மகாராஸ்டிர மாநிலத்திற்கு 560 TMC தண்ணீர் தான் கிடைக்கிறது.

இந்த கணக்கினை வகுத்தவர்கள் நடுவர் நீதிமன்றம் என்கிற மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியின் நீரை
பயன்படுத்துவதில் உண்டாகும் சிக்கலை தீர்வு செய்யும் அமைப்பு.இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 262
வது பிரிவின் படி உருவாக்கப்படும் அமைப்பு ஆகும்.இந்த நடுவர் மன்ற தீர்ப்புபடிதான் கிருஷ்ணா நீர் பங்கீடு மாதிரியே காவிரி நீர் பங்கீடும் உருவாக்கப்பட்டது.

இதன் படி மொத்தம் காவிரிநதி நீரான 726TMC தண்ணீரில் தமிழ்நாட்டுக்கு தான் அதிகமாக 419 TMC தண்ணீர் கிடை க்க வேண்டும்.கர்நாடாகவிற்கு 270 TMC தண்ணீர் தான் கொடுக்க வேண்டும்.அடுத்து 30 TMC தண்ணீர் கேரளாவி ற் கும் மீதி7 TMC தண்ணீர் பாண்டிசேரிக்கும் கிடைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது.

ஆனால் கொடுக்குமா கர்நாடகம்.இந்த காவிரிபிரச்சனை துவங்கிய பொழுது கர்நாடகாவில் விவசாயம்அவ்வளவு
சிறப்பாக இல்லை.1974ம் ஆண்டு காவிரி பிரச்சனையில் முக்கியமானது.அப்பொழுதுதான் சென்னை மாகான அரசு க்கும் மைசூர் அரசுக்கும் இடையேபோடப்பட்ட50 வருஷ ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது.அந்த காலத்தில் தமிழ் நாட் டில் 28 லட்சம் ஏக்கர் பரப்பில்காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் இருந்தது.

ஆனால் அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி விவசா யம் செய்து வந்தது,அந்த காலத்தில் கர்நாடகாவில் ஒரு புத்தி சாலி முதலமைச்சர் இருந்தார்.அவர் பெயர் தேவராஜ் அர்ஸ்.முரடர்களாக இருந்த கன்னடர்களை கொஞ்சம் யோசிக்க வைத்த சாணக்கியர்

இவர் காலத்தில் விவசாயிகள் உறவு என்கிற பெயரில் கன்னட விவசாயிகள் தமிழ்நாட் டுக்கு வந்து இங்குள்ள விவசாய முறைகளை பார்த்துவிட்டு நாமும் அதிகள வில்விவசாயம் செய்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கவேண்டாமல்லவா என்று யோசிக்க வைத்து கர்நாடகா வில் காவிரி கரையில் அதிகப்படியான விவ சாய நிலங்கள்உருவாக்க வைத்தவர்.இதற்கு தேவை யான அணைகளை கட்ட வைத்தவர்.

இதனால் என்ன நடந்தது தெரியுமா…

7 லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்து இப்பொழுது 28 லட்சம் ஏக்கர் பரப்பில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாய நிலங்க ளை பெருக்கிவிட்டார்கள்.ஆனால் தமிழ்நாடோ சுமார்10 லட்சம் விளை நிலங்களை இழந்து விட்டது.
.1991ல் நடுவர் மன்றம் கொடுத்த இடை க் கால தீர்ப்பின் படி கர்நாடகா தனது பாசன பரப் பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்று தீர்ப்பு உள்ளது. ஆனா ல் இதற்க்கெல்லாம் கட்டுப்பட கன்ன டர்கள் இளித்தவாய ர்களா..

கர்நாடாகாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படி இல்லாத காலத்திலேயே நமக்கு தண்ணீர் தராதவர்கள்
இன்று தமிழக வீடுகளில் கர்நாடக பொன்னி அரிசியை பொங்க வைத்த பிறகு இனி விளைநிலமே இல்லாத உங்களுக்கு எதற்கு தண்ணீர் என்று கேட்கிறார்கள். எத்த னை காலத்திற்கு தான் இந்த கன்னடர்களுடன்தண்ணீருக்
காக சண்டை போட்டுக்கொண்டு இருக்க முடியும்?

இப்பொழுது காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்காக பெங்களூரு பற்றி எரிகிறது.தமிழகம் அமைதியாக
இருக்கிறது.ஆனால் நிச்சயம் மத்திய அரசு இதை வேடிக் கை பார்க்காமல் கர்நாடகாவில் இருந்து மேற்கு நோக்கி சென்று அரபிக்கடலில் கலக்கும் நதிகளை தடுத்து தமிழக த்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க தேவையான சாத்திய கூறுகளை ஆராய வேண்டும்.

களிநாடி,ஷாரவதி,சக்ரா,நேத்ராவதி,வராஹி,மகாதவி,பெட்த்தி,ஆகானசினி,பரபோல் என்று 13 ஆறுகள் கர்நாடகா வில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் சுமார் 2000 TMC தண்ணீரைஓவ்வொரு ஆண்டும் வேஸ்டாக கொண்டு
போய் சேர்க்கிறது.இப்பொழுது எத்திஹோலே பிராஜெக்ட் என்கிற பெயரில் இந்த நதிகளை திசை திருப்பும் வேலை யை கர்நாடக அரசு செய்ய துவங்கியுள்ளது.

இதோடு மத்திய அரசும் இணைந்து அந்த நதிகளை காவிரி ஆற்றோடு இணைக்க வேண்டும்.நேத்ராவதி ஆற்றினை பாலாற்றோடு இணைப்பது சுலபம்.அதனால் மத்திய அரசு தென்னிந்திய நதிகளை இணைக்கும் நடவடிக்கையை விரைவாக துவங்க வேண்டும்.

தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் நீர்ஆதாரம் எதுவும் இனி தோன்ற வாய்ப்பில்லாததால் கிடைப்பதையும் சேமித்து வைக்கும் வழக்கம் இல்லாததால் இந்த நதிகளின் நீரை திருப்பி விடும் முயற்சிகளை மத்திய
அரசு தொடங்கினால் தான் வரும்காலத்தில் தமிழகம் வளமுடன் அல்ல உயிருடன் இருக்க முடியும்.

நன்றி விஜயகுமார்

Leave a Reply