உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான என்.டி. திவாரி, பாஜகவில் இணைந்தார்.

தில்லியில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் என்.டி. திவாரியும், அவர் மகன் ரோஹித் சேகரும் புதன்கிழமை இணைந்தனர்.

ஒருங்கிணைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒரு முறையும் என்.டி. திவாரி பதவி வகித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பாஜகவில் அவர் இணைந்திருப்பது உத்தரகண்டில் கட்சிக்கு சாதகமாக இருக்கும்.

Leave a Reply