எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்க உறுதி அளித்திருப்பதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.


அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கிரீன்வேஸ்சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து அந்தஅணியின் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை: பிரதமர் மோடியை தில்லியில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப்பேசினார். அப்போது, தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும்குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.


மேலும், அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை விரைந்துசெயல்படுத்தவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடிசெய்யவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.


எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அக்டோபர் மாதம் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பது குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டு, அந்த விழாவில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.


அதற்கு, விழாவில் கலந்து கொள்வதாகவும், விழாநடைபெறும் தேதியைத் தெரிவிக்குமாறும் நரேந்திர மோடி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply