எம்டிசிஆர்ல் இந்தியா உறுப்பு நாடானது. என்எஸ்ஜி உறுப்பு நாடான சீனா அதில் இந்தியாவை உறுப்பினர் ஆகவிடாமல் தடுத்தது. என்ன தான் வித்தியாசம்?! யாருக்கு இதனால் லாபம்?? போன்ற கேள்பிகளெல்லாம் மனசுக்கு வரும் இல்லையா…

என்எஸ்ஜியை பொறுத்தவரை இது ஒரு தொடர் முயற்சி. சில நிபந்தனைகளை ஏற்காமல் நாம் உறுப்பினர் ஆக முயற்சித்தோம், தொடர்ந்து முயற்சிப்போம்…வெற்றியும் கிடைக்கும்… இப்படித்தான் 2008 வரை நமக்கு அணுக்கதிர் பொருட்களை சப்ளையே செய்யக்கூடாது என முடிவு செய்து இருந்தவர்கள் கடைசியில் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். என்எஸ்ஜியை பொறுத்தவரையில் குறைந்தது 12 – 15 நாடுகள் இந்தியாவை எதிர்க்கும் என்று எதிர்ப்பார்த்த சீனாவின் கனவு தகர்ந்தது. வெறும் நான்கு நாடுகளே எதிர்த்த நிலையில் முடிவற்ற நிலையில் இந்தக்கூட்டம் முடிந்தது, பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும்… விளைவு சீனாவின் சிறப்பு பிரதிநிதியான வோங் என்பவரை(படத்தில் இருப்பவர்) அழைத்து எச்சரித்தது சீன அரசு… தென் சீன கடலில் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், அங்கு இந்தியா எண்ணெய் வளத்தை கண்டுபிடிக்க வியட்நாமுடன் ஒப்பந்தம் செய்துள்ளதும், சீனா அதை கடுமையாக எதிர்ப்பதும், இது குரித்த வழக்கு சர்வதேச அளவில் சீனாவிற்கு பாதகமாக முடிய இந்த சீனாவின் தனிமைப்படுத்தப்பட்ட நிலை உதவும்…இது சீனாவிற்கு பெரும் பின்னடைவை தரும்… 44 நாடுகள் இந்திய ஆதரவு நிலையை எடுத்தன் மூலம், சீனாவின் ஆசிய ஏகாத்தியபத்தியத்திற்கு முடிவுகட்டும் முயற்சி சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும். அதில் சீனா தோற்கும்… நம்மை பொறுத்தவரை என்எஸ்ஜியின் அடுத்த கூட்டம் அநேகமாக செப்டம்பரில்…அதில் ஏற்க வேண்டிய சூழ்நிலை சீனாவிற்கு ஏற்படும்…ஏற்பட வைப்போம்…அதுதான் மோடி அரசு…

எம்டிசிஆர் பொறுத்தவரையில் இந்தியா 35வது நாடாக அங்கமானது. தேவைப்பட்டால் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு தனது ஆயுதங்களை இதன் மூலம் விற்க முடியும். வியட்நாம் போரை பற்றி நாமெல்லாம் கேள்விபட்டு இருப்போம். அப்போது அமெரிக்காவை கண்களில் விரல்விட்டு ஆட்டியது போர்தளவாடங்களில் எதுவுமே இல்லாத வியட்நாம். இன்று சீனாவிற்கும், வியட்நாமிற்கும் கடல் எல்லை தகராறு பெரிய அளவில் இருந்து வருகிறது. சீனா தனது 4வது நீர்மூழ்கிபடையை இந்த கடற்பரப்பில் நிறுத்தி தனது கடல் ஆளுமையை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது. கடலுக்கு அடியில் மறைந்துள்ள நீர்மூழ்கியை தாக்கும் வல்லமையை கொண்டது இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை. அதை தடுக்க இதுவரை உலகில் மாற்று ஆயுதம், தடுப்பரண் இல்லை என்றே கூறலாம், வியட்நாம் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்புகிறது. விற்க இனி இந்தியாவிற்கு தடை ஏதுமில்லை. ஆக நடந்தது நன்மைக்கே…

பெருமைமிகு பாரதத்தின் எல்லைகள் விரிய, சீனாவின் எல்லைகள் சுருங்கும்…

நன்றி . திரு கல்யாண ராமன்

Leave a Reply