தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது.

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை, சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திருமதி டாக்டர் தமிழிசை  சௌந்தரராஜன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களும், சென்னை கோட்ட பொறுப்பாளர் திரு. சக்கரவர்த்தி அவர்களும், மற்றும் கட்சியின் பிற பிரதிநிதிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களின் மகன் வழி பேரன் திரு. பிரவீன் அவர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நேரத்தில் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் மகள் திருமதி. லீலாவதி அவர்களும், புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பின்னர், திரு. பிரவீன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று இருந்திருந்தால் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான, தூய்மையான, ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த ஆட்சியை மனதார பாராட்டி மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள்.

எனவே ஒரு அரசை எப்படி தூய்மையான வழியில் நடத்த வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் விரும்பினாரோ அந்த வழியில் மத்திய அரசை திறம்பட வழி நடத்தும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமைக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும், பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வகையிலும், எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக, எங்கள் காவல் தெய்வமாக விளங்கும் எனது தாத்தாவும், தமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற தலைவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆசியோடு, அவரது நூற்றாண்டில், அவருக்கு மரியாதை செலுத்தி, அவர் நடந்து சென்ற தூய்மையான அரசியலில் நானும் ஈடுபட முடிவெடுத்து நேர்மையான வழியில் அரசியல் நடத்தும் பாரதீய ஜனதா கட்சியில் ஈடுபட  முடிவெடுத்துள்ளேன் என்கின்ற செய்தியை  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள்.

நேற்றைய தினம் ஏற்கனவே திரு. பிரவீன் அவர்கள் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் பொறுப்பாளருமாகிய திரு. முரளிதர் ராவ் அவர்களையும், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களையும் நேரில் சந்தித்து தன்னை பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததும் அவர்கள் அதை மகிழ்ச்சியோடு எற்றுகொண்டதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Leave a Reply