ரசாயன ஆயுதங்கள், தொழில் நுட்பங்கள், அணு சக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றும தியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில்(எம்.டி.சி.ஆர்.,) இந்தியா உறுப்பினரானது.

இந்த அமைப்பில் சேர்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளின் முன்னிலையில், இந்தியவெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த அமைப்பில் இணைய இந்தியா கடந்தஆண்டு விண்ணப்பம் செய்தது. இதில் சேர்வதற்கான நடைமுறைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்தியா இன்று உறுப்பினரானது.

இந்த அமைப்பில் இணைய கடந்தாண்டு இத்தாலி எதிர்ப்புதெரிவித்தது. மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இரண்டு கடற்படை வீரர்கள் கைதானதை தொடர்ந்து இத்தாலி எதிர்ப்புதெரிவித்தது. ஆனால், கடற்படை வீரர்கள் இத்தாலி திரும்ப அனுமதிக்கப் பட்டதை தொடர்ந்து இத்தாலி தனது எதிர்ப்பை குறைத்துகொண்டது. எம்.டி.சி.ஆர்., அமைப்பில் இந்தியா இணைந்ததன் மூலம் இந்தியாவால் பிரமோஸ் போன்ற ஏவுகணையை விற்பனைசெய்யவும், உயர் ரக தொழில்நுட்ப ஏவுகணை தொழில்நுட்பங்களை வாங்கவும் முடியும். ரஷ்யாவுடன் இணைந்து அதிக ஏவுகணை களை தயாரிக்க முடியும். என்எஸ்ஜி.,யில் இந்தியா சேரமுடியாத நிலையில், இந்த அமைப்பில் இந்தியா சேர்ந்துள்ளது. என்.எஸ்.ஜி.,யில் இந்தியா சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் சீனா, எம்.டி.சி.ஆர்., அமைப்பில் உறுப்பினராக இல்லை.

Leave a Reply