மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிகை செய்தி.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் இந்தியாவின் உயரிய AIIMS மருத்துவமனை தந்து, அதனை விரைவில் தொடங்கிட மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திரு விழாவாக கொண்டாடுவோம். தமிழுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து நன்மைகள் பல செய்து வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply