கருப்புபணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவருகின்றன.

சண்டிகாரில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய அமித்ஷா, இதை கடுமையாகசாடினார். அப்போது அவர், ‘‘கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்விஎழுப்பிய எதிர்க்கட்சிகள் எல்லாம் நவம்பர் 8–ந் தேதிக்கு பின்னர் ஒப்பாரிவைக்கின்றன. மாறுபட்ட கருத்துகளைகொண்ட கட்சிகள் எல்லாம், பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கையை எதிர்க்க ஒன்றுபட்டு அணிசேர்கின்றன’’ என கூறினார்.

அத்துடன் ஒருகுட்டிக்கதை சொன்னார். அந்தக் கதை இதுதான்:–

திடீர் வெள்ளத்துக்கு மத்தியில் ஒருபெரிய மரம் இருக்கிறது என்றால் அதில் ஏறி தங்களை காப்பாற்றிக்கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.

எலிகள், பூனைகள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள் எல்லாம் மரத்தில் ஏறும்.அப்படி எல்லோரும் மரத்தில் ஏறியபின்னர், பூனைகள், எலிகளை தின்னாது. கீரிப்பிள்ளை, பாம்பைதாக்காது. வெள்ளம் தணிவதற்காக அனைத்தும் பயத்துடன் காத்திருக்கும்.

அதேபோன்று தான் பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத்தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க் கட்சியினர் எல்லோரும் ஒன்றாக மரத்தில் ஏறுகின்றனர். கீழே ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிப்பு என்ற வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தனைபேரும் பயந்துகொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டின் மக்கள், உங்கள் விளையாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களை நீங்களே காட்டிக்கொடுத்து விட்டீர்கள்’’ என்று கூறினார்.

Leave a Reply