நாடாளுமன்ற வளாகம்  உள்ளிட்ட அரசு அலுவல கங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும் படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்

நாடாளுமன்றத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சர மின் விளக்குகள் கொண்டு அலங்காரம்செய்வது வழக்கம். இந்த ஆண்டு மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மஞ்சள் நிற மின்விளக்குகள் பயன்படுத்துவதை விடுத்து, வெள்ளைநிறத்தில் ஒளிரும் எல்இடி மின் விளக்குகளை பயன்படுத்த மோடி ஆலோசனை அளித்துள்ளார்.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகம்,, குடியரசுத்தலைவர் மாளிகை, அரசு அலுவலகங்கள் என்று அனைத்து இடங்களிலும் எல்இடி மின் விளக்குகள்கொண்டு அலனாகாரம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்கான மின்செலவு என்பது கம்மி என்றும், இதற்கான 7 நாட்களுக்கான மொத்தசெலவு என்பது ஒருலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply