மும்பையில் நடைபெற்றுவரும் ‘மேக் இன் இந்தியா’ வார விழாவையொட்டி, நேற்று சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை தொடர்பாக நடந்த கருத் தரங்கம் ஒன்றில், மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டஒப்புதல் நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமதங்களுக்காக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல்வேறு கூட்டங்களில் நான்கூட இதுபற்றி பேசி இருக்கிறேன். ஆனால், எல்லா நேரங்களிலும் அதிகாரிகளை குறைசொல்ல முடியாது. ஏனென்றால், இதில் அரசியல் ஆதரவு முக்கியபங்கு வகிக்கிறது.

ஒவ்வொரு முறையும் திட்டங்களை விரைவாக நடைமுறைப் படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பங்களையும், யுக்திகளையும் அறிமுகப்படுத்த முயற்சி எடுக்கிறோம். இது போன்ற சூழலில், விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளுக்கு பயந்து புதிய தொழில் நுட்பங்களை ஏற்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

புத்தாக்க முயற்சிகளுக்கு அதிகாரிகள் ஆதரவு அளிக்க வில்லை என்றால், திட்ட நடைமுறையில் காலதாமதம் ஏற்படும். மோடி அரசு ஏற்கவிரும்பும் புதிய தொழில் நுட்பங்களையும், புதுமைகளையும் பெறுவதற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதேவை ஏற்பட்டிருக்கிறது. சாலைகளை வலுப்படுத்த தனியாரின் பங்களிப்பு இன்றியமையாதது.

Leave a Reply