இந்திய எல்லையை ஒட்டியுள்ள தங்களதுபகுதிகளில் முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவுசெய்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர் அஜீஸ் அகமது தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா  மியான்மர் எல்லையில் சுமார் 282கி.மீ தொலைவிற்கு முள்வேலி அமைக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்தியா தனது எல்லையில் 79 சதவீதம் அளவுக்கு முள்வேலி அமைத்து விட்டது. இது எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும் வங்கதேசத்தின் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவுவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply