எளிமைக்கு பெயர்போனவர் மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். ஒரு முறை தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பாதுகாப்புதுறை அமைச்சரான பிறகு தன்னால் கோலாபுரி செருப்புகளை அணிய முடிவதில்லை என்று வருத்தபட்டார்.

இவர்கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலை பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவுசெய்தவர். 1978இல் மும்பையிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே ஐஐடியில் படித்த முதல்மாநில முதல்வர் ஆவார்.

4 முறை கோவாவின் முதல்வராக இருந்த பாரிக்கர், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இவர் நரேந்திர மோடியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இவரது பதவி காலத்தில்தான் முதன் முதலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. எளிமைக்கு பெயர்போன பாரிக்கர் பாதுகாப்புதுறை அமைச்சரான பிறகு, தன்னால் கோலாபுரி செருப்புகளை அணிய முடியவில்லை என்று வருத்தப்பட்டார். ‌

அவருடைய உடைகுறித்து கேள்வி எழுப்பபட்ட போது அவர், தனக்கு மேற்கத்திய உடைகளை அணிய பிடிக்காது என்றும், அவர் வழக்கம்போல இயல்பாக அணிந்துவரும் உடைகளே அவருக்கு பிடித்துள்ளது என்றார். மேலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களை விட தன்னுடைய உடை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் கணைய புற்று நோயால் பாதிப்படைந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *