கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதைஇல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து கிருஷ்ணா வெளியேறினார்.

இதையடுத்து இன்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில், எஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply