காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள்முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவுக்கு வரவேற்பதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்தகெளடா தெரிவித்தார்.

இதுகுறித்து மடிக்கேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடக முன்னாள் முதல்வரும், நாட்டின் பக்குவபட்ட அரசியல்வாதிகளில் முக்கியமானவருமான எஸ்எம்.கிருஷ்ணா, 46 ஆண்டுகள் உழைத்த காங்கிரஸ்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் நடத்தை மற்றும் அக்கட்சியின் கொள்கைகளால் வெறுப்பு ஏற்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி யிருக்கிறார்.

அவரின் முடிவு கர்நாடகத்துக்கும், நாட்டுக்கும் நல்லது. அவர்விரும்பினால் பாஜகவுக்கு வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எருதுகளை வண்டியில்பூட்டி சகதியில் விரட்டிவிட்டு விளையாடப்படும் கம்பளா விளையாட்டு கர்நாடகத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகும்.

அந்தவிளையாட்டை தொடர்ந்து விளையாட சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பாஜக ஆதரவளிக்கும். ஊழல் மற்றும் தீவிரவாத செயல்களை தடுக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Leave a Reply