தமிழக பாஜகவின் வங்கிக் கடன் உதவும் தாமரைத் திட்டத்தைப் பார்த்து திகிலடைந்த தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் திரு.K.S. அழகிரி அவர்கள், அதை எதிர்த்து பாஜகவை மிரட்டும் தொனியில், பாஜகவின் மீது வழக்கு தொடரப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அகராதியில் ஊழலுக்குப் பெயர் ப.சிதம்பரம் என்றும், கடன் பெற்று ஏமாற்றுவதற்காகவே ஒரு திட்டம் “பூஜாரி லோன்” என்றும் பெயரெடுத்த காங்கிரஸ் கட்சி மிரட்டுவது ஆச்சரியமில்லைதான்.

இது திருப்பித் தராமல் ஏமாற்றிய பூஜாரி லோன் அல்ல…. பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தி திருப்பிச் செலுத்தும் மோடி லோன் …. தகுதியுள்ள, திருப்பிச் செலுத்தும் யாராக இருந்தாலும், பாஜக உதவும் – காங்கிரசும் உதவலாமே!

காங்கிரஸ் எப்போதும் ஒரு வழிப்பாதை – வாங்கித்தான் பழக்கம் – திருப்பிச் செலுத்தி பழக்கமில்லை – அதனால்தான் இந்த ஒப்பாரி. உதவும் எண்ணம் காங்கிரஸ் அகராதியிலேயே கிடையாது. எனவே காங்கிரஸ் இதுவரை உதவியதில்லை. ஆனால் உதவுபவரை தடுப்பதையும், குற்றம் சொல்வதையும் இதுவரை அக்கட்சி நிறுத்தவில்லை.

தமிழ்நாட்டில் பார்லிமெண்ட் தேர்தலில், காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்கியிருக்காது. இது அழகிரிக்கும் தெரியும். மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக தோளில் சவாரி செய்தது. தற்போது திமுகவின் காலடியில் கிடந்து சில MP சீட்களில் ஜெயித்திருக்கிறது.

தன்னை அறியாமலே திரு அழகிரி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். காங்கிரஸ் தந்த கல்விக்கடன் ஊழல் பற்றி நாடறியும்.காங்கிரஸ் புரோக்கர்களால் கல்விக்கடன் தகுதியில்லாதவர்கள் மற்றும் போலி நபர்களுக்கு தரப்பட்டு ,கடன் திரும்பச் செலுத்தபடாமல் போனது.அதே மாதிரி பாஜக செல்லவேண்டும் என்கிறார் அழகிரி. காங்கிரசின் ஊழல், லஞ்ச லாவண்ய கலாச்சாரத்தை பாஜக ஒரு போதும் தத்தெடுக்காது.

என்றும் தேசப் பணியில்
(எஸ்.ஆர்.சேகர்)

Comments are closed.