உடல் நல பிரச்னைகள், ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத் தினருக்கும், கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்து கின்றன. ஏழைகளுக்கு, மலிவுவிலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

நாட்டில், படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ மனைகளைஅதிகளவில் திறக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், டாக்டர்கள் பற்றாக் குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுளளது. கிராமப்புற மக்களுக்கு, சிறந்த மருத்துவசிகிச்சை அளிப்பதற்காகவே, மருத்துவக் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன; மருத்துவ படிப்பு இடங்களும் அதிகரிக்கப் பட்டுள்ளன.
 


மக்களுக்கு தரமான சிகிச்சை, குறைந்தசெலவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, மத்திய அரசு அறிவித் துள்ளது; இதன் மூலம், 50 கோடி மக்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ காப்பீடு வழங்கப் படும்; இதற்கானமுதல் கட்ட பணிகள் துவங்கிவிட்டன.
 

சிறு நகரம் மற்றும் கிரா மங்களில் வசிப்பவர்கள், மருத்துவமனை அல்லது சுகாதார மையங்களுக்கு உடனடியாகசெல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 1.5 லட்சம் சுகாதார மையங்களை திறக்க, அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளால், ஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது; இதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மருந்துவாங்குவது, ஏழைகளுக்கு மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக, மத்திய அரசு செயல்ப டுத்தியுள்ள திட்டத்தால், ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், 'ஸ்டென்ட்' விலை குறைக்கப் பட்டுள்ளதால், ஏழைகள் பெரிதும் பயன் பெற்றுள்ளனர்.
 


ஏழைகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்குவ தற்காகவே, 'பிரதம மந்திரி ஜன் ஆஷோதி பரியோஜனா' செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,600க்கும் அதிகமான, மலிவு விலை மருந்துகடைகள் திறக்கப்பட்டு உள்ளன; இங்கு, 700க்கும் அதிகமான மருத்துகள், மலிவு விலையில் வழங்கப்படுகின்றன.

வெளியில் வாங்குவதை விட இங்கு, 50 – 60 சதவீதம் வரை, குறைந்த விலையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 50 வயதுக்கு மேற்பட்ட பலரும், மூட்டுவலியால் பாதிக்கப்ப ட்டுவுள்ளனர். பணம் உள்ளவர்கள் மட்டுமே, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு, 2.5 லட்சம் ரூபாயிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் வரை செலவானது.
 

ஆனால், தற்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு, 70 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த சிகிச்சைக்கு, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 80 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. இதனால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply