மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 10க்கும் மேற்பட்டோர், முதல்வர்பதவி கனவுகளோடு உள்ளனர். அவர்களில் 3 பேர் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கின்றனர். 


அவர்கள் ஒவ்வொருவரும் பிறரின் கால்களை வாரிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் பதவி கனவில் அதிகம்பேர் இருக்கையில், அவர்களால் மக்களின் வளர்ச்சிகுறித்து சிந்திக்க முடியாது. 


மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்புவதற்கு காங்கிரஸுக்கு எதுவும் கிடைக்க வில்லை. அனைத்து நிலைகளிலும் மாநில பாஜக அரசு பல்வேறு வளர்ச்சிபணிகளை செயல்படுத்தியிருப்பதால், அக்கட்சி விரக்தியடைந்துள்ளது. 


இந்த விரக்தியின்காரணமாக, பாஜக அரசை விமர்சிப்பதற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து கிடைக்கும் புகைப் படங்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இதேபோல், போலியான செய்திகளையும் காங்கிரஸ் பரப்பிவருகிறது. அவர்களின் பொய்களை, மக்களிடையே நீங்கள் (பாஜகவினர்) அம்பலப்படுத்த வேண்டும் .


பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் செய்துவரும் பொய் பிரசாரத்துக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை; கேளிக்கையாக நினையுங்கள். சாகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதிய பெண் வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாஜக.,வை ஆதரிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நான் தெரிந்துகொண்டேன்.


மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் நலத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக, நாட்டுமக்கள் நம்மை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்; அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. ஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், நாடும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

5 மக்களவை தொகுதிகளை சேர்ந்த பாஜக.,வினருடன் தில்லியிலிருந்தபடி விடியோகான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடியாது. 

Leave a Reply