ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறைகொண்டவர் ஜெயலலிதா என பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தனது இரங்கல்செய்தியில், "ஜெயலலிதாவின் மறைவு ஆழ்ந்த துயரத்தைத்தருகிறது. அவரது மறைவு, இந்திய அரசியலில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

குடிமக்களுக்கு நெருக்கமான ஜெயலலிதா, ஏழைகள் – பெண்களின் நலன்மீது அக்கறைகொண்டு எப்போதுமே தூண்டுகோலாக திகழ்பவர்.

இந்த துயர்மிகு தருணத்தில், தமிழகமக்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்த பேரிழைப்பைத் தாங்கக்கூடிய வல்லமையை அவர்களுக்கு தருமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.

பலதருணங்களில் ஜெயலலிதாவுடன் பேசும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அவை நெகிழ்வான தருணங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடையவேண்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply