உங்களுக்கு யாரையாவது தாக்க வேண்டு மானால் என்னை தாக்குங்கள்; என்னை சுடுங்கள்; ஆனால், தலித்மக்களை விட்டு விடுங்கள்,

தலித்மக்கள் மீது சமீபகாலமாக தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித்மக்களை வைத்து, யாரும் அரசியல் செய்யவேண்டாம்.
யாரையாவது தாக்க வேண்டுமானால், என்னை தாக்குங்கள், தலித்துகளை அல்ல. யாரையாவது சுடவேண்டும் என்றால், என்னை சுட்டுத் தள்ளுங்கள், தலித்துகளை அல்ல.நாட்டில் சமீபகாலமாக சில வெட்கக்கேடான சம்பவங் கள் நடந்துவருகின்றன.

ஏழை தலித்மக்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. தலித்சகோதர, சகோதரிகளை மோசமாக நடத்த உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? மக்களை பிளவு படுத்தி பார்ப்பதை ஏற்க முடியாது; அதை உடனடியாக நிறுத்தவேண்டும்.


ஒரு நாடு, ஒரு வரி என்ற வரலாற்று சிறப்பு மிக்க, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நிறைவேற அரசுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாடு முழுவதும் காவிபுரட்சி ஏற்பட வேண்டும். சக்தியை அளிக்கக் கூடியதுகாவி நிறம்.நாடுமுழுவதும் புதிய சக்தியை அளிக்கக் கூடிய காவி புரட்சி ஏற்பட வேண்டும்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியது:

Leave a Reply