ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுவதும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

வங்கிகளில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையிலிருந்து 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என மத்திய அரசு புதியஉத்தரவை பிறப்பித்துள்ளது. விவசாயிகள், திருமணம் செய்வோர் ஆகியோர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

 பல்வேறு பகுதிகளில் புதிய ரூபாய்நோட்டுக்கள் வழங்கும் வகையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் மாற்றம் செய்யப்படாததால், பணம் எடுக்கமுடியாமல் பொதுமக்கள் தொடர்ந்து சிரமப்படுகின்றனர்.


இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண்ஜெட்லி கூறுகையில் "ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டு மாற்றும்போது சிலர் சிரமங்களுக்கு உள்ளானது துரதிர்ஷ்ட வசமானது.

ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான புகார்கள் கடந்த சிலநாட்களில் குறைந்துள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் இந்த நடவடிக்கையை அரசியல்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்'' என்றார்.

மேலும், ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply