நாடுமுழுவதுமுள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) தரத்தை மேம்படுத்த, உலக வங்கியின் ஒத்துழைப்புடன் ரூ.6,000 கோடியை ஒதுக்குவதற்கு மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே புதன்கிழமை ஆய்வுமேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நாடு முழுவதுமுள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டமொன்றை தொடங்கியுள்ளோம். அத்திட்டத்தின்கீழ், உலகவங்கியின் ஒத்துழைப்புடன் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட விருக்கிறது. அதுமட்டுமன்றி, கிராமப்புறங்களில் புதிதாக தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும். இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர்.


நாடுமுழுவதுமுள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களின் செயல் பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மிகமோசமாக செயல்பட்ட ஒருசில தொழிற்பயிற்சி நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளன என்றார் அவர்.


ஷில்லாங் மட்டுமன்றி, மேகாலயா விலுள்ள வேறு சில அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் அனந்த்குமார் ஹெக்டே ஆய்வுமேற்கொண்டார். அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்களிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

Leave a Reply