ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இடம், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மையம் (Missile Technology Control Regime (MTCR)) மற்றும் அணு விநியோக குழுவில் (Nuclear Suppliers Group) இந்தியாவிற்கு இடம் உள்ளிட்ட வைகளில், இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க நார்வே முடிவுசெய்துள்ளது.


இந்தியா வந்துள்ள நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் பார்கே பிரெண்டே தலைமையிலான குழு, டில்லியில் மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோர்களை சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பினிடையே, இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply