பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றநிலையில் நேற்றுடன் இந்த அரசின் நான்காண்டுகால ஆட்சி நிறைவடைந்தது.
இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக்நகரில் மகா நதி நதிக் கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்பேசுகையில், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பது 4 ஆண்டுகால மத்திய அரசுக்கு மக்கள்தந்த அங்கீகாரம் என குறிப்பிட்டார். இந்தகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்பினார்.