விஜய பாஸ்கர் வீட்டில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியாகின. அதில் ஆர்கே நகரில் 85 சதவீத ஓட்டுகளை குறி வைத்து பணம்கொடுக்க அதிமுக அம்மா அணியினர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அந்த ஆவணத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் பழனி சாமி, ராஜ்ய சபா எம்.பி., வைத்திலிங்கம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி, நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின் பெயர் செங்கோட்டையன் பெயருக்கு கீழே எழுதப் பட்டுள்ளது. முதல்வர் பெயருக்கு நேராக 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்று எழுதப் பட்டுள்ளது. 39 ஆயிரத்து 50 வாக்காளர்களை இவர் கவர் செய்யவேண்டும் என்று அதில் குறிப்பு உள்ளது.
 
இதேபோல ஒவ்வொரு அமைச்சர்கள் செலவிடவேண்டிய தொகை, கவர் செய்யவேண்டிய வாக்காளர் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் ஒரு வாக்காளருக்கு ரூ.4000 கொடுக்க திட்டம் போடப் பட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தொகுதிவாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம், 2 லட்சத்து 62,721 ஆகும். இதில், 85% வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஒருமாநில முதல்வரே இவ்வாறு பணம் சப்ளைசெய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply