ராணுவத்தில் ஒரேபதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தைச் செயல்படுத்த முதல்கட்டமாக, ரூ.5,500 செலுத்தப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் , ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றியிருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,

‘ஒரேபதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. முந்தைய அரசில் இருந்த சிலருக்கு இதுபற்றி தெரியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். நான் பிரதமரான பிறகு, இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தேன்.

இதனை நிறைவேற்ற ரூ.10,000 கோடி தேவை. இப் பெரியதொகையை ஒரே தவணையில் செலுத்த இயலாது. எனவே, 4 தவணைகளில் பெற்றுக் கொள்ளுமாறு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களைக் கேட்டுக்கொண்டேன்.

அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி, சுமார் ரூ.5,500 கோடி முதல் தவணைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply