‘மாற்றியமைக்கும் இந்தியாவுக்கான தேசியநிறுவனம்’ அல்லது ‘நிதி’ என்ற பெயரில் கடந்த ஆண்டுதொடக்கத்தில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உருமாற் றத்துக்கு ஆதாரம்சார்ந்த சிந்தனைகளை வழங்கி வழிகாட்டுவதற்காக இந்தஅமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் மூலம் முக்கியமான வெளிப்புறகருத்துகளை அரசின் கொள்கைகளில் சேர்க்கும் வகையில் ‘நிதி’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாடும் தனது சொந்தஅனுபவம், வளம் மற்றும் பலத்தை பெற்றிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் ஒருநாடு தனது பிரச்சினைக்கு சொந்தமாக தீர்வுகாண முடிந்திருக்கலாம். ஆனால் இன்று நாடுகள் ஒன்றையொன்று சார்ந்தும், இணைந்தும் இருக்கின்றன.எந்த ஒருநாடும் சொந்தமாக வளர்ச்சியை காண முடியாது. சர்வதேச தரத்திலான நடவடிக்கைகளையே ஒவ்வொரு நாடும் தங்கள் அளவுகோல்களாக வைத்துள்ளன. இல்லை யென்றால் அவற்றால் வளர்ச்சிகாண முடியாது.

இந்தமாற்றத்தின் சவால்களை இந்தியா சந்திக்க வேண்டுமென்றால் வெறும் ஆதாய முன்னேற்றம் மட்டும்போதாது. ஒரு உருமாற்றம் நிச்சயம்தேவை. படிப்படியான வளர்ச்சியாக இல்லாமல் இந்தியா துரிதமாக மாற்றம் அடையவேண்டும் என்ற எனது நோக்கத்துக்கான காரணமும் இதுவேஆகும்.

இந்த துரிதமாற்றத்துக்கு நமது சட்டங்களை மாற்றியமைத்து, தேவையற்ற நடைமுறைகளை கைவிட்டு, செயல் பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் தொழில் நுட்பத்தையும் கைக்கொள்ள வேண்டும். 19–ம் நூற்றாண்டு நிர்வாக அமைப்பைகொண்டு 21–ம் நூற்றாண்டில் நாம் நடைபோடமுடியாது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் நீண்டகால நிர்வாகபாரம்பரியத்தை கொண்டவை. இது நாட்டின் கடந்தகால வரலாற்றில் இருந்து உள் மற்றும் வெளிச் சிந்தனைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்த நிர்வாக பாரம்பரியம் இந்தியாவுக்கு பலவழிகளில் சேவைபுரிந்துள்ளது.

இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையை பேணுவதுடன், வேற்றுமை நிறைந்தமகத்தான நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை பாதுகாக்கிறது. இவையெல்லாம் குறைந்த சாதனைகள் அல்ல.

 

Tags:

Leave a Reply