நாட்டிலுள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் உதய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத்தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்ததிட்டம் செயல்படுத்தப் படுகிறது. உதய் திட்டத்தில் நுகர்வோரை பாதிக்கும் ஒருசிறிய அம்சம் கூட இடம்பெறவில்லை. அதேசமயம் நுகர்வோரின் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,000 கோடிமக்கள் பணத்தை சேமிக்க முடியும்.

இது குறித்து விளக்குவதற்காக தமிழக முதல்வரைச் சந்திக்க முயற்சித்தேன். ஆனால், மாநில அரசின் பிடிவாத குணத்தால், என்னால் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. இந்த திட்டம் குறித்து தமிழக அரசுக்கு நிலவும் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இணைச் செயலாளர் தலைமையிலான குழுவை அனுப்பி இருந்தேன்.

மாநில அரசு கேட்டகேள்விகளுக்கு அவர்களும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அதன்பிறகும் தமிழக அரசு இத்திட் டத்தில் சேரவில்லை.

உதய் திட்டத்தை செயல் படுத்தினால் ஒவ்வொரு நுகர்வோரின் மின்கட்டணமும் வெகுவாகக் குறையும். இது குறித்த விவரங்களை யார் வேண்டு மானாலும் மத்திய அரசின் எரிசக்தித்துறை அமைச்சக இணைய முகவரியில் பார்க்கலாம். உதய்திட்டம் தொடர்பாக முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஆதாரமற்றது, தவறானது.

மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம், முதல்வரின் விளக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியது:

Leave a Reply