பிரதமர் நரேந்திரமோடி, முதல் முறையாக பதவிக்கு வரும்போது பாராளுமன்ற மத்திய வளாகத்தில் நின்று தன்னுடைய உரையை துவங்கினார். ஐந்துவருடங்கள் கழித்து அதே இடத்தில் நின்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை நேற்றுமாலை நிகழ்த்தினார்.

2014ம் ஆண்டு, அன்றைய குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க, இந்த அரசு ஏழை மக்களுக்கானது என்று அன்று அவர் குறிப்பிட்டார். நேற்று நடந்த உரையில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியானது ஏழைகளுக்கானது. இம்முறையும் ஏழைகள்தான் எங்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்கினார்கள் என்று கூறியுள்ளார்.

முதல் உரையின்போது, சப்கா சாத், சப்கா விகாஸில் இருந்து சப்கா சாத், சப்கா விகாஸ் ஆர் சப்கா விஸ்வாஸ் என்று குறிப்பிட்டார். இந்தியாவினை புதிய உயரங்களுக்கு அழைத்து செல்வதாற்கான தாரகமந்திரம் அது. புதிய உயரத்தினை அடைய இருக்கும் இந்தியா என்ற வார்த்தைகள்தான் மோடிக்கு இம்முறையும் வெற்றி வாய்ப்பினை குவித்துள்ளது.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு ஒருமுதல்வர், பிரதமராக வரும் போது அவருடைய உரை நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவக்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அவர் நிகழ்த்திய உரை ஒருபொறுப்பு மிக்க நாட்டின் பிரதமர் உரையாக இருந்தது.

நேற்று தேசியஜனநாய கூட்டணிகளின் ஒருமித்த தலைவராக பிரதமர் மோடியை வழிமொழிந்தனர் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். என்டிஏ கூட்டணியில் வெற்றிபெற்ற எம்.பிக்களின் கூட்டத்தில் இந்த உரையை நிகழ்த்தினார் மோடி.

பிராந்திய மக்களின் கனவுகள், பாஜகவை தேர்வு செய்தாவர் களுக்கும் அளிக்கப்படும் உறுதிமொழிகள், நாட்டின் வளர்ச்சிக்காக கூட்டணிக் கட்சிகள் மீது உருவாகியுள்ள புதிய அழுத்தங்கள் என கடந்த போது கவனம்பெறாத விவகாரங்களுக்கும் இம்முறை முக்கியத்துவம் அளித்து பேசினார் மோடி.

சிறுபான்மை மக்கள் பலவருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஆனால் இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு நேராது பார்த்து கொள்ள வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் பொறுப்பே என்றும் அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக வெறும் வாக்குவங்கிகளுக்காகவே சிறுபான்மையின மக்களிடம் ஒருபயத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் அந்தபயத்தினை உடைத்து அவர்களின் நம்பிக்கையினைப் பெறவேண்டும் என்று அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு உரையின் போது சிறுபான்மையின மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தோ, எதிர்கட்சியினரின் வாக்குவங்கிகள் குறித்தோ மோடி பேசவில்லை.

நேற்றைய நிகழ்வின் பிராந்திய கனவுகளுடன் கூடிய தேசிய இலக்கு என்ற பதத்தினை முன்வைத்து இதன்மூலம் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று கூறினார். பிராந்திய மக்களின் தேவைகள் குறித்து 2014ம் ஆண்டு அவர் பேசவில்லை. நேற்றைய உரையின்போது அகலிதளம், சிவசேனா, ஜே.டி.யூ, எல்.ஜே.பி மற்றும் அதிமுக தலைமைகளுக்கு இடங்கள் அளிக்கப்பட்டன.

வி.ஐ.பி. கலாச்சாரம் குறித்து எம்.பிக்களை எச்சரிக்கை செய்துள்ளார் மோடி. 2014ம் ஆண்டினை போலவே இம்முறையும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் காலில்விழுந்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார் மோடி.

2014ம் ஆண்டு பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட போது, நாடாளுமன்ற வாசலில் நுழையும்போது தலை வணங்கினார். நேற்றைய உரையில், இந்திய அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கி விட்டு தன்னுடைய உரையைத் துவங்கினார் மோடி.

 

பிரதமர் மோடியின் உரை 

புதிய இந்தியாவை உருவாக்க இனிதானதுவக்கம் இது. உங்களின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்.என்னை நம்பிய கூட்டணிகட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அனைவரது ஆலோசனையையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம். தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் முறையாக தேர்வான எம்.பி.,க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

புதிய இந்தியாவை உருவாக்கவே இந்ததீர்ப்பை மக்கள் நமக்கு அளித்துள்ளனர். யார் சேவைசெய்வார்கள் என அறிந்து மக்கள் தேர்வு செய்துள்ளனர். சேவையை தொடரும்போது மக்களின் ஆதரவு தானாகவே கிடைக்கும்.

 

இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாமல், வெளி நாடுவாழ் இந்தியர்களும் கொண்டாடு கின்றனர். இந்ததேர்தல் உலகத்தையே வியப்படைய வைத்துள்ளது. இது மனங்களை ஒருங்கிணைத்த தேர்தல். அதிகளவில் இந்தியமக்கள் ஓட்டளித்துள்ளனர். பெண்களும் அதிக ளவில் ஓட்டளித்துள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலை விட 2019 தேர்தலில் 25 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பெற்றுள்ளோம். சுதந்திர இந்தியாவில் அதிகபெண் எம்.பி.,க்கள் இந்த லோக்சபாவில்தான் உள்ளனர்.

பல தேர்தல்களில் வெற்றி,தோல்விகளை சந்தித்துள்ளேன். இந்த தேர்தல்தான் எனக்கு ஒருபாடம். நாடு முழுவதும் பிரசாரம்

மேற்கொள்ளவில்லை; தீர்த்தயாத்திரையே மேற்கொண்டேன். சமரசம்செய்தது இல்லை பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்தது இல்லை. விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. தேசத்தின் வளர்ச்சி, மாநில நலன் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயலாற்றும்.

புதிய எம்.பி.,க்கள் புகழுக்காக பணியாற்றாமல் மக்களுக்காக சேவை செய்யவேண்டும். சிறுபான்மையினரை வெறும் ஓட்டுவங்கியாகவே எதிர்க்கட்சிகள் கருதிவருகின்றனர். உண்மையில், வளர்ச்சியின் பலனை சமூகத்தின் அனைத்து தரப்புமக்களும் அனுபவிக்க வேண்டும்.

தற்போது நடந்த லோக்சபா தேர்தல் சிறப்புவாய்ந்தது. அது ஒரு வண்ணமயமான திருவிழாபோல் இருந்தது. அதில் வெற்றி இன்னும் இனிமையானது. வழக்கமாக, தேர்தல் என்றால் பிரிவினை இருக்கும்; இடைவெளியை அதிகரிக்கும். பிரிவினை சுவர்களை ஏற்படுத்தும். ஆனால், 2019 லோக்சபாதேர்தல் பிரிவினை சுவர்களை தகர்த்தெறிந்துவிட்டது; இதயங்களை இணைத்துவிட்டது. இதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.

வழக்கமாக தேர்தல்களில் அரசுக்கு எதிரான அலை வீசும். ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ., அரசுக்கு ஆதரவானஅலை வீசியது. இதில் அடிப்படை அரசின் மீதான மக்களின் விசுவாசம் மட்டுமல்ல; மக்கள் தங்களுக்குள் காணப்பட்ட நம்பிக்கைதான். நமது புதியபயணம் மீண்டும் துவங்க உள்ளது. புதுசக்தியுடன் புது பயணத்தை துவக்குவோம். நாட்டின் வளர்ச்சிதான் முக்கிய குறிக்கோள். தேசிய எதிர்பார்ப்புகளும், மாநில நலன்களும் மதிக்கப்பட வேண்டும்.

இதயங்களை நாம் வெல்லவேண்டும். எந்த பதவி கிடைத்தாலும், கட்சி உறுப்பினர் என்ற எண்ணம், நம்மில்உயிர்ப்போடு இருக்கவேண்டும். நான் இந்தியாவின் பிரதமராக இருக்கிறேன் எனக்கூறி எனக்கு சிறப்பு சலுகை எதிர்பார்க்க வில்லை. விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் காத்திருக்கவே விரும்புகிறேன்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களுக்கு நான் சொல்லும் அறிவுரை… நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள் என்பதுதான். பொது இடத்தில் பேசும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். தேவையற்ற கருத்துக்களை கூறக் கூடாது; நாவடக்கம் அவசியம். ஊடகங்கள், பல்வேறு யூகங்களுடன் உங்களை அணுகலாம். நீங்கள் எதுகுறித்து கூறினாலும் அதுசெய்தியே. அதனால் ‘ஆப் தி ரெக்கார்டு’ என்ற உரையாடல் எதுவும் கிடையாது.

புதிய அமைச்சரவையில் யார் இடம்பெற போகின்றனர் என்ற யூகங்களுடன் செய்திகள் வருகின்றன. இதை நம்பவேண்டாம். நம்பினால் நம்மில் பிரிவினைதான் ஏற்படும். நான் எனது எம்.பி.,க்களிடம் பிரிவினையை விரும்ப வில்லை; நான் யாருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கமாட்டேன். இவை எல்லாம் தகுதிக்கு ஏற்ப, விதிமுறைக்கு ஏற்ப நடப்பவை. நாம் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது மக்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

அரசியல் கட்சிகள் தங்களின் சுயலநலனுக்காக இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பலஆண்டுகளாக துரோகம் இழைத்து வந்துள்ளன. சிறுபான்மையினரை பயமுறுத்தி சிலர் தேர்தலில் பயன் படுத்திக் கொண்டனர். இதனால், அரசியல்கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை நாம் முழுமையாக பெறவேண்டும். நமக்கு ஓட்டு அளித்தவர்கள், ஓட்டு அளிக்காதவர்கள் என்ற பாகுபாட கூடாது. ஓட்டு அளித்தவர்களுக்கும், அளிக்காதவர் களுக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம். இவ்வாறுமோடி பேசினார்.

Comments are closed.