மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை.சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கைச் செய்தி.

கச்சத்தீவில் அமைந்துள்ள கத்தோலிக்க கிருத்துவ தேவாலயத்தின் ஆண்டுதோறும் நடைபெறும் ஆலயத்திருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொள்வது நீண்ட நாள் நடைமுறை. ஆனால் தற்போது நடைபெறும் விழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய வெளிவுறவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தொடர்பு கொண்டார்.

தற்போது அந்த சர்ச்சில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா வரும் டிசம்பர் 7ந் தேதி நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவில் புதிய சர்ச் கட்ட உதவியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்விழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதை இலங்கைத் தரப்பில் தெளிவுபடுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் மார்ச் மாத திருவிழாவின் போது இந்திய இலங்கை பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் இலங்கத் தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டது.

இருப்பினும் தற்போது நடைபெற உள்ள புதிய சர்ச் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியத் தரப்பில் சிலரையாவது அனுமதிக்க வேண்டுமென்று மத்திய இணையமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply