கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துவருகின்றன. 
 
இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கச்சத் தீவை காங்கிரஸ், திமுக ஆகியகட்சிகள் தான் இலங்கைக்கு தாரைவார்த்தன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனை யானது, இரு நாடுகளுடைய பிரச்சனை என்பதால் கட்சத் தீவை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
 
திருப்பூரில் கன்டெயினர் லாரிகளில்இருந்து ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தொடர்பு படுத்தி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. வரும் 10-ந் தேதி பாஜக தலைமையகத்தில் பாஜக-வின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை மூட தமிழகரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply